தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்துவந்தவர் 24 வயதான பித்தலா கிரான். மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.
இதன்காரணமாக தினந்தோறும் மது அருந்திவிட்டு, தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கொடூரத்தின் உச்சமாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்ற தீயை பற்றவைத்தார். வீட்டின் கதவையும் பூட்டிக் கொண்டார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் கிரானின் மனைவி சப்தம் கேட்டு அருகேயிருந்தவர்கள் ஓடிவந்தனர்.
அதற்குள் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு கரிக்கட்டையாகச் சுருண்டுவிழுந்தார். அவருக்கு அரசு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கிரானை கைது செய்த காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), மனைவியை துன்புறுத்துதல் 498 (ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, தனக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் அவர் மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிரானுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, இரண்டாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மனைவியை அடித்துக்கொன்று நாடகமாடியவர் கைது