ETV Bharat / jagte-raho

காளான் பறிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்! - kallakkurichi latest news

சின்னசேலம் அருகே திருமணிமுக்தா நதியில் காளான் பறிக்கச் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

teen slipped in to the river and died
teen slipped in to the river and died
author img

By

Published : Dec 19, 2020, 8:01 AM IST

கள்ளக்குறிச்சி: ஆற்றில் காளான் பறிக்கச் சென்ற இளைஞர் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள தோட்டபாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் மணிகண்டன், நேற்று காலை 11 மணியளவில் தோட்டபாடி கிராமத்தின் அருகேயுள்ள திருமணிமுத்தா நதியில் காளான் பறிக்கச் சென்றுள்ளார்.

அப்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்வேளையில், திருமணிமுக்தா நதியில் காளான் பறிக்கச் சென்ற மணிகண்டனை நேற்று முழுவதும் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

அவர் கிடைக்காத நிலையில், இன்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமணிமுத்தா நதியில் ஆடு மேய்க்கச் சென்றபோது, தண்ணீரில் சடலம் ஒன்று இருப்பதைப் பார்த்தபோது, காணாமல்போன மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கும், மணிகண்டனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்துவந்த கீழ்குப்பம் காவல் துறையினர், மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.