சென்னை: யானைக்கவுனியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் உடற்கூராய்வு தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன மூவரில் தலில் சந்த் காதில் சுடப்பட்டுள்ளார் எனவும், மேலும் அவரது மனைவியான புஷ்பா பாய், மகன் சீத்தல் ஆகியோர் நெற்றியில் சுடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
உடற்கூராய்வு பரிசோதனையில், உடலில் எடுத்த குண்டுகளை வைத்துப்பார்க்கும்போது, நாட்டு ரக கள்ளத்துப்பாகியைப் பயன்படுத்தி அருகில் நின்று சுட்டதாகத் தெரிய வந்துள்ளது. அதேசமயம் இது வடமாநிலத்தில் தயாரிக்கப்படும் நாட்டுத்துப்பாக்கி எனவும் அறியப்படுகிறது.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணைக்காக புனே சென்ற தனிப்படை காவல் துறையினர் கைலாஷ், ரவீந்தரநாத்கர், விஜய் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!