கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காந்திநகர் காலனி பகுதி மக்கள் நேற்றிரவு (டிச.31) புத்தாண்டு தினத்தை கொண்டாடினர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த காந்திநகர் ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சரத்பாபு, சுபாஷ், பவுல்குமார் ஆகியோரை வழிமறித்த ஜானகிராமன் (23) என்ற இளைஞர் ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மதுபோதையில் இருந்த நால்வரும் அவர்களது நண்பர்களுடன் இரும்புக் கம்பி, அரிவாளுடன் வந்து சுமார் இரவு 3 மணியளவில் வீடு புகுந்து ஜானகிராமனை தாக்கி, அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டுச் சென்றனர்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜானகிராமனை அப்பகுதி மக்கள் மீட்டு மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!