ETV Bharat / jagte-raho

பெண்களுக்கு பாலியல் தொல்லை - தலைமை காவலர் மீது புகார்! - பாலியல் தொல்லை

சென்னை: வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

complaint
complaint
author img

By

Published : Aug 11, 2020, 1:11 PM IST

சென்னை பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வரும் திருமணமான பெண் ஒருவர், செம்பியம் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், ” எங்கள் வீட்டின் உரிமையாளர் பெயர் கண்ணன். இவர் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று குளித்து விட்டு நான் வீட்டிற்குள் சென்ற போது, கண்ணன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தகாத முறையில் நடக்க முயற்சித்தார்.

இதனால் நான் பயந்து அருகில் இருந்த மற்றொரு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து விட்டேன். பின்னர் எனது கணவர் வந்தவுடன் நடந்ததைக் கூறினேன்.

இதையடுத்து, எனது கணவரும், மாமியாரும் கண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் தாக்கிய தலைமைக் காவலர் கண்ணன், மிரட்டலும் விடுத்தார்.

இதற்கிடையில் வீட்டில் குடியிருக்கும் மற்ற இரு பெண்களிடமும், கண்ணன் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரியவந்தது. எனவே, தலைமைக் காவலர் கண்ணன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் கொள்ளையர்கள் 11 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.