ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவி கர்ப்பம்; ஆசிரியருக்கு வலைவீச்சு! - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

சேலம்: பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த அரசுப் பள்ளி வேதியியல் ஆசிரியர் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

பள்ளி மாணவி கர்ப்பம்! ஆசிரியருக்கு வலைவீச்சு..!
author img

By

Published : Jul 7, 2019, 12:06 AM IST

சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்தது தொடர்பாக அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவி படிக்கும் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் பாலாஜி என்பவர் தான் மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரின் புகாரின் பேரில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டுலைன் அமைப்பினர் சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தினர், வேதியியல் ஆசிரியர் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கு உள்ளனர் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவி தரப்பில் நேரில் ஆஜராகி இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விளக்கம் அளிக்கும்பட்சத்தில் ஆசிரியர் பாலாஜி மீது கைது நடவடிக்கை தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவிகளின் பெற்றோர் சிலர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகச் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குக் கிடைத்த புகாரின் பெயரில் ஆசிரியர் பாலாஜியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Intro:பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த
அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Body:

சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஆசிரியர் பாலாஜிக்கு பாலாஜியை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியில் செ யல்பட்டு வரும் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்தது தொடர்பாக அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மாணவி படிக்கும் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் பாலாஜி என்பவர் தான் மாணவியின் கர்ப்பத்திற்கு கா ரணம் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் மாணவியின் குடும்பத்தினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியரின் புகாரின்பேரில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டுலைன் அமைப்பினர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தினர், வேதியியல் ஆசிரியர் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கு உள்ளனர் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாணவி தரப்பில் நேரில் ஆஜராகி இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கும்பட்சத்தில் ஆசிரியர் பாலாஜி மீது கைது நடவடிக்கை தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவிகளின் பெற்றோர் சிலர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் அவர்களை சமரசப்படுத்தினர். இது தொடர்பாக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கிடைத்த புகாரின் பெயரில் ஆசிரியர் பாலாஜியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Conclusion:பள்ளி மாணவியின் பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான ஆசிரியர் பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வருவது சேலம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.