ETV Bharat / jagte-raho

நகைக்கடை கொள்ளை - காவல் துறை விசாரணை! - கைரேகை நிபுணர்கள்

சேலம்: நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த அடையாம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நகைக்கடை கொள்ளை
நகைக்கடை கொள்ளை
author img

By

Published : Nov 3, 2020, 11:18 AM IST

சேலம் இரும்பாலை சாலையிலுள்ள சித்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியில் ஆர்.ஆர். ஜூவல்லரி நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்(நவ.1) வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவர். வழக்கம்போல நேற்று(நவ.2) காலை 8 மணிக்கு கடையை திறக்க ராஜா வந்துள்ளார்.

அங்கு ஷட்டரில் இருந்த இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

நகைக்கடை கொள்ளை நகைக்கடை கொள்ளை

இதுகுறித்து இரும்பாலை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கடையின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்கள் இரண்டு பேர் முகமூடி அணிந்து வந்து கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வந்து கடையில் இருந்த நகைகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் குறித்தும், கொள்ளையர்களின் கைரேகையை வைத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பழைய குற்றவாளிகள் பட்டியலை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: மதுரையை கலக்கும் ரஜினி ரசிகர்களின் அரசியல் சுவரொட்டிகள் - 'முடிவு சொல் தலைவா!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.