ETV Bharat / jagte-raho

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்: கைப்பற்றிய சுங்கத் துறை

author img

By

Published : Jan 31, 2020, 9:11 AM IST

சென்னை: கொழும்பு, துபாய் ஆகிய நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 57 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாடைக்குள் மின்னும் கடத்தல் தங்கம்: கைப்பற்றிய காவல்துறை!
உள்ளாடைக்குள் மின்னும் கடத்தல் தங்கம்: கைப்பற்றிய காவல்துறை!

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜித் (30), உபைதூர் ரகுமான் (37), சபீர் அலி (38) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதில் மூன்று பேரிடமிருந்து ரூ. 37 லட்சம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்.

இதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த அஜ்மல் தாசின் (23) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 712 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

மொத்தமாக நான்கு பேரிடம் இருந்து ரூ. 57 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 357 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தங்க நகைகளை யாருக்காகக் கடத்தி வந்தனர், பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கின்றனர் உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

Intro:கொழும்பு, துபாயில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 350கிராம் தங்கம் பறிமுதல் Body:கொழும்பு, துபாயில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 350கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அப்துல் மஜித்(30), உபைதூர் ரகுமான்(37), சபீர் அலி(38) ஆகியோர் வந்தார். 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது எதுவுமில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ. 37லட்சம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அஜ்மல் தாசின் (23) என்பவரை சந்தேகத்தின் நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 30 லட்சம் ஆயிரம் மதிப்புள்ள 712 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

4 பேரிடம் இருந்து ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 357 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.