ETV Bharat / jagte-raho

முகக் கவசம் அணியவில்லை: கேள்வி கேட்ட காவலரை காரில் இழுத்துச் சென்றவர் கைது! - குற்றச் சம்பவங்கள்

மும்பை: முகக் கவசம் அணியாமல் சென்றதை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலரை காரின் முன்பக்கம் வைத்து இழுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவலரை காரில் இழுத்துச் சென்ற வீடியோ
காவலரை காரில் இழுத்துச் சென்ற வீடியோ
author img

By

Published : Nov 6, 2020, 11:59 AM IST

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் முகக் கவசம் அணியாமல் காரில் உள்ளே அமர்ந்திருந்தவரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரை, அந்த காரின் முன்புறம் வைத்து இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுசமயம் காரின் முன்பக்கம் காவலர் தொங்கிக் கொண்டிருப்பதை அருகே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டுள்ளனர். பின்னர், அந்தக் காரை துரத்திப் பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சின்ச்வாட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகாரின் படி, போக்குவரத்துக் காவலர் முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணிக்கும் பணியில் இருந்துள்ளார். அப்போது குற்றம்சாட்டப்பட்டவர் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும்போது காரின் முன்பக்கம் வைத்து இழுத்துச் சென்றுள்ளார்.

காவலரை காரில் இழுத்துச் சென்ற வீடியோ

இதனால், போக்குவரத்து காவலரான பாசாகேப் சாவந்த் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் யுவராஜ் ஹனுவதே (49) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் 307, 353, 323, 279, 24 (அ), 177 ஆகிய பிரிவுகளின்கீழ், சின்ச்வாட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு: ரூ.60,400 பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.