ETV Bharat / jagte-raho

சேலத்தில் ரூ.6.5 லட்சம் பறிப்பு; நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகள் 5 பேர் கைது! - சேலத்தில் 6.5 லட்சம் பறிப்பு

சேலம்: சேலத்தில் நகைக் கடை உரிமையாளரை மிரட்டி, ரூ. 6.5 லட்சம் பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல் துறையினர்,  அவர்களிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

Policemen arrested 5 thieves for 6.5 Lakhs theft

author img

By

Published : Jun 18, 2020, 1:48 AM IST

சேலம், அம்மாபேட்டை அண்ணா நகர் 4ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் தண்ணீர்த்தொட்டி பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். பழைய நகைகளை வீடுகளுக்கே நேரில் சென்று, வாங்கி அதை விற்றுப் பணம் கொடுத்து வந்தார்.

கார்த்திக்கின் நண்பரான மணிகண்டன், நகை மதிப்பீட்டாளர் தொழில் செய்து வருகிறார். கார்த்திக்கும்,மணிகண்டனும் சேர்ந்து நகைகளை வாங்கி விற்றும் வந்தனர்.

இந்த நிலையில் சேலம் பச்சப்பட்டியை சேர்ந்த தனசேகரன் (வயது 34) என்பவர், 20 சவரன் தங்க நகை தன்னிடம் இருப்பதாகவும், இதற்கு ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் போதும் எனவும் கார்த்திக்கிடமும், மணிகண்டனிடமும் தெரிவித்தார்.

அதற்கு நேற்றுமுன்தினம் இரவு (ஜூன் 16) பணத்தை எடுத்துக்கொண்டு, தனசேகரன் தெரிவித்த இடத்திற்கு கார்த்திக்கும் மணிகண்டனும் சென்றனர்.

அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் கொன்று விடுவோம் என மிரட்டி, கார்த்திக்கிடம் இருந்த ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக் கொண்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கார்த்திக் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க மாநகர துணை ஆணையர் செந்தில், அஸ்தம்பட்டி உதவி ஆணையர் ஆனந்தகுமார், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் விசாரணை நடத்தி நான்கு மணி நேரத்தில் துப்பு துலக்கினர். பிறகு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பறிப்பில் ஈடுபட்ட தனசேகரன் மற்றும் அவரது நண்பர்களான சேகர், நவீன்குமார், பார்த்தசாரதி, மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் வீடுகளில் மறைத்து வைத்திருந்த ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும்; பணம் பறிக்க பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தனசேகரனிடம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தான் குழந்தைகளுக்காக பொம்மை துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருந்ததாகவும், அதை எடுத்து வந்து நகை வியாபாரி கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

கைது செய்யப்பட்ட தனசேகரனும், அவரது நண்பர்களும் வேறு வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளார்களா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் பறித்த வழக்கில் நான்கு மணி நேரத்தில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்த அம்மாபேட்டை தனிப்படை காவல் துறையினரை சேலம் மாநகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் பாராட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.