சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலை, கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகர், 6ஆவது தெருவில் வசித்து வருபவர் நடிகை கவுதமி.
இவரது வீட்டில், அதிகாலை 4 மணியளவில், சுற்றுச் சுவரை ஏறி குதித்த அடையாளம் தெரியாத நபர், வீட்டிற்குள் சென்று திருட முயன்றதாக, சதிஷ் என்பவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில், வீடு புகுந்து திருட முயன்ற கொட்டிவாக்கம் குப்பத்தைச் சேர்ந்த பாண்டியன் (24) என்பவரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது 380, 511 ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
விசாரணையில் அந்த நபர், காதம்பரி பிக்சர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராக வேலை பார்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குறு, சிறு திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பதே எங்களது குறிக்கோள்!