ETV Bharat / jagte-raho

பிரபல ரவுடிகள் கைது: காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு! - காவல் ஆணையர்

சென்னை: புறநகர்ப் பகுதியில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடிகள் இருவரை கைது செய்த காவலர்களை ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார்.

arrest
author img

By

Published : Sep 7, 2019, 2:35 PM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சூளை ஆண்டியப்பன் தெருவில் வசித்துவரும் உதயகுமார் என்பவர், தனக்குச் சொந்தமான காலி மனையை போலி பத்திரம் தயாரித்து அதன் மூலம் இடத்தை விற்க முயன்றதாக புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி புழல் உதவி ஆணையர் ரவி உத்தரவின் பேரில் செங்குன்றம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிலமோசடி சம்பந்தமான குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ரெட்டேரி புழல் லட்சுமிபுரம் அருகில் உள்ள டாஸ்மாக் அருகே ரவுடி சந்துரு என்ற சந்திரகுமார் இருப்பதாக புழல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அங்கு இருந்த சந்துருவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், சந்துரு புழலில் போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதேபோல் செங்குன்றம் பகுதியில் ரோந்துக்கு சென்ற காவல் துறையினர் தனிகா என்ற பெரியபாளையம் தணிகாச்சலம் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், தனிகா தமிழ்நாடு முழுவதும் ஆறு கொலை வழக்குகளில் தேடப்பட்டுவந்த நபர் என்பதும் செங்குன்றத்தில் உணவு விடுதியில் பணம் வழிப்பறி செய்த நபர் என்பதும் கூலிப்படை தலைவனாக இருப்பதும் தெரியவந்தது. சந்துரு இவரின் கூட்டாளி ஆவார்.

arrest
கைது செய்யப்பட்ட ரவுடிகள்

இவர்கள் இருவரும் நில அபகரிப்பு, மோசடி, வழிப்பறி, கொலை, கொள்ளை, போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் ரவுடிகள் இருவர் சிக்கியுள்ளதால் சென்னை ஆணையர் விஸ்வநாதன், செங்குன்றம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஆய்வாளர் தங்கதுரையை பாரட்டியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகளை குண்டர் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கூலிப்படையைத் சேர்ந்த மாதவரம் பிரபாகரன், காவாங்கரை வணமாமலை, மணிகண்டன், பார்த்திபன், அந்தோணிதாஸ், சூர்யா, சென்னை பிரகாஷ், சந்திரகுமார் என்ற அம்பத்தூர் சந்துரு, இன்பா, இனியா, சைலு, சுபாஷ் ஆகியோரை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.

Intro:சென்னையை புறநகர்ப்பகுதியில் வழிப்பறி திருட்டு போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு நில அபகரிப்பு என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்

Body:சென்னையை புறநகர்ப்பகுதியில் வழிப்பறி திருட்டு போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு நில அபகரிப்பு என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்

செங்குன்றம் புழல் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல கொலை வழிப்பறி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சூளை ஆண்டியப்பன் தெருவில் வசித்துவரும் உதயகுமார் வயது 38 என்பவர் தனக்கு சொந்தமான காலி மனையை போலி பத்திரம் தயாரித்து அதன் மூலம் இடத்தை விற்க முயன்றதாக புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி புழல் உதவி கமிஷனர் ரவி ஆலோசனையின் பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் புழல் இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிலமோசடி சம்பந்தமான குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ரெட்டேரி புழல் லட்சுமிபுரம் அருகில் உள்ள டாஸ்மார்க் பாரின் அருகே ரவுடி சந்துரு இருப்பதாக புழல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு நின்றிருந்தவரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதேபோல் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று இரவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தனிகா என்ற பெரியபாளையம் தணிகாச்சலம் என்பவரை கைது செய்தனர்

விசாரணையில் சென்னையை கலக்கி வந்த பயங்கர ரவுடிகள் தணிகா என்ற பெரியபாளையம் தணிகாசலம் இவன் தமிழ்நாடு முழுவதும் ஆறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் என்பதும் செங்குன்றத்தில் உணவு விடுதியில் பணம் வழிப்பறி செய்த நபர் என்பதும் கூலிப்படை தலைவனாக இருப்பதும் தெரியவந்தது .

இவனுடைய கூட்டாளியான மற்றொரு நபர் அருமந்தையை சேர்ந்த சந்துரு என்ற சந்திரகுமார் வயது 33 என்பவர் புழலில் வழக்கறிஞர் அகில் என்பவரை கொலை செய்தவழக்கில் சம்பந்தப்பட்ட இவர்தான் புழலில் போலி ஆவணம் மூலம் தயாரித்து அந்த இடத்தை விற்பதிற்கு முயன்ற பலே கில்லாடி என தெரியவந்தது .

இந்த இருவரும் சேர்ந்து பயங்கர குற்றச்செயல்களில் அதாவது நில அபகரிப்பு மோசடி வழிப்பறி கொலை கொள்ளை போன்ற சம்பவத்திலும் இவர்கள் ஈடுபட்டு அதில் கிடைக்கின்ற பணத்தை வைத்து தனியே ராஜ்ஜியமே நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இவர்கள் அளித்த தகவலின் பேரில் இவர்களிடம் கூலிப்படையை சேர்ந்த மாதவரம் பிரபாகரன் ,காவாங்கரை வணமாமலை ,மணிகண்டன் ,பார்த்திபன் ,அந்தோனிதாஸ் ,சூர்யா ,சென்னை பிரகாஷ் ,சந்திரகுமார் என்ற அம்பத்தூர் சந்துரு ,இன்பா ,இனியா ,சைலு ,சுபாஷ் ஆகிய கூலிப்படையினரை பொறிவைத்து பிடிக்க தனிப்படை போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.

மேலும் ஒரே நேரத்தில் ரவுடிகள் இருவர் சிக்கியுள்ளதால் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் செங்குன்றம் ஆய்வாளர் ஜவஹர்பீட்டர் புழல் ஆய்வாளர் தங்கதுரை தங்கதுரை மற்றும் சிறப்புதனிப்படையினருக்கும் பாராட்டு தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 2 ரவுடிகளையும் குண்டர் பிரிவின்கீழ் கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.