ETV Bharat / jagte-raho

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது! - கற்பழிப்பு

திருச்சி: தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

NIT
author img

By

Published : Aug 6, 2019, 4:10 AM IST

Updated : Aug 6, 2019, 6:11 PM IST

திருச்சி, துவாக்குடி அருகே அமைந்துள்ளது தேசிய தொழில்நுட்ப கழகம். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் விடுதியில் தங்கி படித்துவருகின்றனர். இவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவரும் விடுதியில் தங்கி மூன்றாமாண்டு பொறியியல் படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி அந்த மாணவி தனது காதலனுடன் வெளியில் சென்றுவிட்டு நேற்று அதிகாலை மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளார்.

TIRCHY NIT  GIRL STUDENT RAPED  YOUNG MAN  கற்பழிப்பு  தேசிய தொழில்நுட்ப கழகம்
தேசிய தொழில்நுட்ப கழகம்,திருச்சி

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் எனவும், இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மாணவியின் காதலனை தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவர் படுகாயமடைந்து மயங்கினார்.

பின்னர் அந்த மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அவர், காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்ததில், அவர் அதேப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், மாணவியிடம் ஊர்காவல்படை காவலர் என பொய்சொல்லி பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.

தேசிய தொழில்நுட்ப கழக வளாகம்

Intro:திருச்சி அருகே கல்லூரி மாணவியை கற்பழித்ததாக வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Body:திருச்சி: திருச்சி அருகே கல்லூரி மாணவியை கற்பழித்ததாக வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி துவாக்குடி அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இதர மாநில மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி இங்கு தங்கி இன்ஜினியரிங் பயின்று வருகிறார்.
தற்போது அவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சென்னைக் கல்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் இந்த மாணவியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவி கடந்த 1ம் தேதி முன் அனுமதி இன்றி விடுதியிலிருந்து வெளியே சென்றார்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் காதலனுடன் கல்லூரிக்கு வந்தார்.
அப்போது கல்லூரி நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது அங்கு மணிகண்டன் என்ற வாலிபர் வந்து தன்னை ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் இருவரிடமும் விசாரணை செய்வது போல் விசாரித்து காதலனை திடீரென மணிகண்டன் தாக்கினார்.
மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாக கூறி அழைத்துச் சென்ற மணிகண்டன், விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து அவரை அடித்து கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரியவந்துள்ளது. வாலிபர் தாக்கியதில் படுகாயமடைந்த காதலன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மாணவி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Conclusion:கற்பழிக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Last Updated : Aug 6, 2019, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.