கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப் 6) அன்று ஹோப்ஸ் கல்லூரி அருகே இளவரசன் என்பவர் அவரது வீட்டின் முன் "என் குடும்பத்தில் கரோனா இல்லாதவர்களுக்கு கரோனா என்று கூறி அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகள்" என்று பதாகை வைத்திருந்தார்.

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இளவரசன் மீது மூன்று பிரிவுகளின்கீழ் சிங்காநல்லூர் காவல் துறையினர், இரு தினங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு (செப். 10) சிங்காநல்லூர் காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர். இளவரசன் நீதிமன்றத்தில் பிணை கோரியதையடுத்து, நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.