ETV Bharat / jagte-raho

இந்திய தொழிலதிபர்களை குறிவைத்து நைஜீரிய கும்பலை பண மேசடி: ஒருவர் கைது! - சென்னை குற்றச்செய்திகள்

அத்தியாவசிய, மருத்துவ குணமுள்ள பொருள்களை வாங்கி ஏற்றுமதி செய்யச் சொல்லி, தொழிலதிபர்களை குறிவைத்து பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பலைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நைஜீரிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது
நைஜீரிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது
author img

By

Published : Dec 24, 2020, 4:56 PM IST

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப். ராயல் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், மெத்தைகள், தலையணைகள் போன்றவைகளை இணைய வர்த்தகம் மூலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இதன் வாயிலாக வெளிநாடுகளுக்கும் பொருள்களை ஏற்றுமதியும் செய்து வருகிறார். ஜோசப் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

லண்டன் பெண்

அதில், லண்டனில் இருந்து எலிசபெத் என்ற பெண் சமூகவலைதளம் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு, தான் ஒரு தொழிலதிபர் என அறிமுகம் செய்து கொண்டார். மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருள்களை லண்டனில் வியாபாரம் செய்வதற்கு தனக்கு உதவுமாறு கேட்டார்.

அவ்வாறு மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருள்களை வாங்கி ஏற்றுமதி செய்தால், கமிஷனாக அதிக தொகை தருவதாக எலிசபெத் கூறினார்.

புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவ குணமுள்ள 'போலிக் ஆயில்' வேண்டும் எனவும், அந்தப் பொருள் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிடைப்பதாக கூறிய எலிசபத், அந்நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் கொடுத்தார். மும்பை நிறுவனத்திடம் 'போலிக் ஆயிலை' வாங்கி தனக்கு ஏற்றுமதி செய்யுமாறு எலிசபெத் கோரினார்.

35 லட்சம் மோசடி

அதனை நம்பி, அந்த மும்பை நிறுவனத்தில் சுனிதா என்பவரை தொடர்பு கொண்ட போது, ஆர்டர்களை மெயில் மூலமாக அனுப்ப வேண்டும் என சுனிதா கூறினார். இதனை அடுத்து, 50 லிட்டர் போலிக் ஆயில் வேண்டும் எனக் கூறி நான் மெயிலில் ஆர்டர் செய்தேன். 200 லிட்டர்களுக்கு குறைவாக ஆர்டர் செய்ய முடியாது எனக் கூறிய சுனிதா, 200 லிட்டர் போலிக் ஆயிலுக்காக ரூ.35 லட்சத்தை முன்பணமாக செலுத்தினால் மட்டுமே பொருள்களை அனுப்ப முடியும் என பதில் மெயில் அனுப்பினார்.

இது தொடர்பாக, எலிசபெத்திடம் பேசிய போது, 200 லிட்டர் போலிக் ஆயிலை வாங்குவதற்கு அவர் ஒப்புக் கொண்டார். பொருள்களை வாங்கிய பிறகு தான் பணத்தை அனுப்ப முடியும் எனக் கூறிய எலிசபெத், முன்பணம் செலுத்தி, ஆயிலை வாங்கி கொள்ளுமாறும், கமிஷன் தொகையோடு சேர்த்து பொருளுக்கான பணத்தை அனுப்பிய பின்னர் போலிக் ஆயிலை தனக்கு அனுப்பித் தருமாறு கூறினார்.

போலி நிறுவனம்

இதனையடுத்து தான் 35 லட்சம் ரூபாய் பணத்தை மும்பை நிறுவனம் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி, 200 லிட்டர் போலிக் ஆயிலை ஆர்டர் செய்தேன். நீண்ட நாள்களாகியும், மும்பை நிறுவனத்திடமிருந்து பொருள்கள் வராததால், சந்தேகம் அடைந்து விசாரணை செய்தேன்.

விசாரணையில், மும்பை நிறுவனம், சுனிதா என்ற பெண் எல்லாம் போலி என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் லண்டனில் உள்ள எலிசபெத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. திட்டமிட்டு தன்னை மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

லண்டனில் இருந்து பேசியதாக கூறப்படும் எலிசபெத் தொடர்புகளை ஆய்வு செய்த போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெளிநாட்டிலிருந்து பேசியது போல பேசி மோசடி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஜோசப் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன்மூலம், நைஜீரியாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, இந்திய தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.

கமாடிட்டி ஸ்கேம்

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இந்தியாவில் 'கமாடிட்டி ஸ்கேம்' என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 4 புகார்கள் உள்ளன, இந்தியா முழுதும் 20 மோசடிகள் நடந்துள்ளது. நைஜீரியன் கும்பல் ஒன்று தொழிலதிபர்களை குறிவைத்து, சமூக வலைதளம் மூலம் அவர்களை அணுகி இந்த மோசடியை செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஏற்றுமதி செய்யும் தொழில் செய்துவரும் தொழிலதிபர்களை குறிவைத்து, அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள்கள் வாங்கி ஏற்றுமதி செய்யுமாறு கோரி இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றனர்.

அந்தப் பொருள்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவல்களை நைஜீரிய கும்பல்கள் தெரிந்து வைத்துக்கொண்டு, அந்த இடங்களில் நிறுவனங்கள் இருப்பது போல போலியான நிறுவனங்களை உருவாக்கி மோசடியை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

நைஜீரியர் கைது

மேலும் இது தொடர்பாக, மும்பை அந்தேரி பகுதியில் இருந்த, ஃபுல்ஜன் குவாடியோ கிரிஸ்டோபர் வில்மர் என்ற நைஜிரிய நாட்டை சேர்ந்த வாலிபரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின், சிவில் ஏவியேஷன் அலுவலர்களிடம் அனுமதி பெற்று விமானம் மூலம் அவரைச் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பிடிபட்ட நைஜீரியனுக்கு உடந்தையாக செயல்பட்ட மற்றவர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அடுத்த கட்டமாக கைது செய்யப்பட்ட நைஜீரியனை காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடிகட்டிப் பறந்த 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை : இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.