ETV Bharat / jagte-raho

10 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் திரிந்த கொள்ளையர் கொம்பையா கைது!

முத்தையா மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால் மூன்று மாவட்ட காவல் துறையினர் முத்தையாவை தீவிரமாக தேடி வந்தனர். இச்சூழலில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துவந்த முத்தையா காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளையர் கொம்பையா
கொள்ளையர் கொம்பையா
author img

By

Published : Aug 27, 2020, 7:50 PM IST

திருநெல்வேலி: 10 ஆண்டுகளாக காவல் துறையினர் பிடியில் சிக்காமல் இருந்த கொள்ளையர் கொம்பையாவை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா என்ற கொம்பையா. இவர் வழிப்பறி செய்தல், பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இங்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

இந்த மாவட்டங்களில் முத்தையா மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால் மூன்று மாவட்ட காவல் துறையினரும் முத்தையாவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் யார் கையிலும் சிக்கவில்லை. இப்படியே 10 வருடங்கள் ஓடிப் போனது. இச்சூழலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் போரில் தனிப்படை அமைக்கப்பட்டு முத்தையா எங்கிருக்கிறார் என்று தீவிர தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டுவந்தனர்.

அதில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் தனது குடும்பத்துடன் முத்தையா வசித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், அங்குள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை சுற்றி வளைத்த காவல் துறையினர், முத்தையாவை கைதுசெய்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சேரன்மகாதேவி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த முத்தையா குறித்த மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும், சுத்தமல்லிப் பகுதியில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியுமான கிட்டப்பா -வின் கூட்டாளி முத்தையா என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கியது எப்படி?

பணம், நகை, விலையுர்ந்த பொருள்கள் ஆகியவற்றை திருடி வந்த கொம்பையா அதை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்துடன் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் காவல் துறையினரின் கெடுபிடி அதிகமானதால் குடும்பத்துடன் தேனி மாவட்டம் கூடலூருக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இதற்கிடையில், தேடப்படும் குற்றவாளியான கொம்பையாவின் புகைப்படத்தை மாவட்ட காவல் துறையினர் தமிழ்நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளனர். இவ்வேளையில் தான் கொம்பையா சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். அப்போது உளவுப்பிரிவு காவலர் ஒருவர் கொம்பையாவை கண்டதும் அவரை பின்தொடர்ந்து முகவரியை கண்டுபிடித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.