டெல்லி கேட் பகுதி ஜல்காரி நகரில் வசிக்கும் காசிம் கான் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற இந்து பெண்ணை மணந்துள்ளார். தனித்தனி மத நம்பிக்கைகள் இருந்தாலும், அவருடன் நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அவரது மனைவி இந்து மதத்தை பின்பற்றுவதைக் கண்டு, விருப்பம் கொண்டு காசிம் கான் தன்னை இந்து மதத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். தனது பெயரையும் கரம்வீர் சிங் மோகர் என்று மாற்றியுள்ளார்.
இவர் இந்து மதத்திற்கு மாறிய பிறகு செல்போன் மூலம் அதிக அச்சுறுத்தல் அழைப்புகள் வந்துள்ளன. பின்னர் உதவிகோரி மூத்த காவல்துறை கண்காணிப்பாளரை கான் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து அவர், எனக்கு தெரியாத பல எண்களிலிருந்து மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. மேலும் எனது குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்குமார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி விரைவில் குணமடைய விரும்புவதாக பவர்ஸ்டார் அறிக்கை