ETV Bharat / jagte-raho

திருமணம் செய்துவைக்க துன்புறுத்திய மகன்... தீர்த்துக்கட்டிய தாய்! - திருப்பூர் சிதம்பரம் தாயால் கொலை

உலக்கையால் அடித்து மகனைக் கொன்ற தாய். உடனே, தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என தாயை துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்து தாய் மகனைக் கொலை செய்தார்.

mother killed son in thiruppur
mother killed son in thiruppur
author img

By

Published : Nov 11, 2020, 12:34 PM IST

திருப்பூர்: திருமணம் செய்துவைக்கக்கோரி, தாயை துன்புறுத்திய மகனை, தாயே உலக்கையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி. இவரது மனைவி தமிழரசி (55). இவர்களுக்கு சதீஷ் (30), சிதம்பரம் (27) ஆகிய இரு மகன்கள் இருந்துள்ளனர்.

இருவரில் மூத்த மகன் சதீஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இளைய மகன் சிதம்பரத்துக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஜேசிபி ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததால், இவருக்கு பெண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தனக்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனது அம்மாவிடம் பல மாதங்களாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இவ்வேளையில் செவ்வாய்க்கிழமை (நவ. 10) இரவு 7 மணியளவில் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக்கூறி, தனது அம்மாவிடம் சண்டையிட்டுள்ளார். சண்டை பெரிதாகவே அருகிலிருந்த உலக்கையை எடுத்து தாய், தன் மகனை அடித்துள்ளார்.

அடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிதம்பரம் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகனை தானே அடித்துக்கொன்றுவிட்டதாக அலங்கியம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அலங்கியம் காவல் துறையினர் தமிழரசியை கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் சிதம்பரத்தின் உடலைக் கைப்பற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் மகனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.