ETV Bharat / jagte-raho

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை!

author img

By

Published : Jun 20, 2020, 2:25 PM IST

கோட்டா: காதல் விவகாரத்தில் இளைஞரை அடித்து கொன்றதாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Jhalawar Police Rajasthan Rajasthan Crime news in Rajasthan Blind murder case in Rajasthan காதல் விவகாரம் இளைஞர் படுகொலை ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் ரட்லாய் காவல்நிலையத்துக்குட்பட்ட ரகுநந்தாபுரா கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் பலத்த காயங்களுடன் கிடப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்த காவலர்கள், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், உயிரிழந்த இளைஞர் 26 வயதான ராகேஷ் குமார் தெலி என்பதும் அதேபகுதியைச் சேர்ந்த ராதுலால் லோதா (60) என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் ராதுலால் மகளும், ராகேசும் காதல் வயப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ராகேஷ் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராதுலால் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பத்ரிலால் லோதா என ஆறு பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: 'ராகுல் காந்தி அரசியல் செய்ய வேண்டாம்'- ராணுவ வீரரின் தந்தை கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.