தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரை சேர்ந்தவர் பாண்டிராஜ் (27). இவர் 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனது குறித்து சிறுமியின் தந்தை, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், பாண்டிராஜ் மற்றும் சிறுமி இருவரையும் தேடிவந்தார். இந்நிலையில் நேற்று (டிச.8) நள்ளிரவில் இருவரையும் கண்டுபிடித்த காவல் துறையினர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பாண்டிராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் விரலி மஞ்சள் பறிமுதல்!