ETV Bharat / jagte-raho

பாண்டிகோயிலில் நிகழ்ந்த கொடூர கொலை! குற்றவாளிகளை தேடுகிறது போலீஸ்! - pandikovil murder

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான பாண்டிகோயில் பூசாரியின் நண்பரை, அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pandikovil temple priest friend murdered

author img

By

Published : Oct 10, 2020, 5:25 PM IST

மதுரை: பாண்டிகோயில் பூசாரியின் நண்பரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலைசெய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை விரகனூர் அருகேயுள்ளது ஆண்டார் கொட்டாரம். அப்பகுதியில் வசித்துவரும் முத்துராஜா, மதுரையின் சிறப்புமிக்க பாண்டிகோயில் பூசாரியின் நண்பராவார். கோயில் காரியங்களுக்கு நண்பருக்கு உதவியாக பாண்டிகோயிலுக்கு அவ்வபோது சென்றுவந்துள்ளார். இச்சூழலில் இன்று (அக். 10) பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில், நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் முத்துராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், அப்பகுதிகளில் தடயங்களைச் சேகரித்து கொலை குற்றவாளிகள் குறித்த விவரங்களை சேகரித்துவருகின்றனர். காதுகுத்து நிகழ்வில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.