ETV Bharat / jagte-raho

வழக்கறிஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட- உதவி ஆய்வாளர்!

சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த வழக்கறிஞர், உதவி ஆய்வாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

SUB INSPECTOR
author img

By

Published : Aug 8, 2019, 11:17 PM IST

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் பெரியசாமி என்பவர்,அவரது கட்சிக்காரருடன் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்போது அந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சுந்தரம் என்பவர் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.

HUMAN RIGHTS  SUB INSPECTOR AND ADVOCATE  2018 CASE  தூத்துக்குடி  உதவி ஆய்வாளர் '
கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடர்புடைய செய்தித்தாள்கள்

இதனை எதிர்த்து கேள்வி கேட்ட வழக்கறிஞர் பெரியசாமியை, சுந்தரம் சரமாரியாக தாக்கியுள்ளார் . அவர் தாக்கியதில் வழக்கறிஞரின் முகத்தில் இரத்தம் வடிந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் இந்த புகைப்படத்தை நேரடியாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் காட்டி முறையிட்டார்.

இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று உதவி ஆய்வாளர் சுந்தரம், வழக்கறிஞர் பெரியசாமி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்பொழுது உதவி ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக பெரியசாமி நீதிபதியிடம் தெரிவித்தார்.

விசாரணைக்காக வந்திருந்த வழக்கறிஞர், உதவி ஆய்வாளர் இடையே வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் பெரியசாமியை எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளிக்குமாறு தெரிவித்தார். இதனிடையே சுந்தரத்துக்கும், பெரியசாமிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்திருந்த காவல் துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி வாக்குவாதம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Intro:Body:சென்னை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் மற்றும் உதவி ஆய்வாளர் இடையே வாக்குவாதம்

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் பெரியசாமி அவரது கட்சிதாரருடன் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அப்போது உதவி ஆய்வாளர் சுந்தரம் வழக்குபதிவு செய்யாமல் இருந்துள்ளார். இதனை எதிர்த்து கேள்வி கேட்ட வழக்கறிஞரை சுந்தரம் தாக்கியதில் வழக்கறிஞரின் முகத்தில் இரத்தம் வடிய பின்பு வழக்கறிஞர் மூலமாகவே செல்பி எடுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற வழக்கறிஞர் தலைவர் மோகன் இந்த புகைப்படத்தை நேரடியாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் காட்டி முறையிட்டு உள்ளார்.இது தொடர்பாக நீதிமன்றம் தாமான முன்வந்து சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்தது.பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் வழக்கறிஞர் பெரியசாமி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்பொழுது உதவி ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக பெரியசாமி நீதிபதியுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீதிபதி வழக்கறிஞர் பெரியசாமி இடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அங்கு உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் காவல் துறையினர் இந்த வாக்குவாதம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.