ETV Bharat / jagte-raho

தகாத உறவுக்கு தடையாக இருந்த மனைவி கொலை- ராணுவ வீரர், காதலி கைது - ராணுவ வீரர் கைது

கிருஷ்ணகிரி: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த ராணுவவீரர் மற்றும் அவரது காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலையில் முடிந்த காதல்
author img

By

Published : Apr 8, 2019, 10:22 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவரது மனைவி கவுதமி (29). இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜேஷ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கவுதமி கடந்த 5 ஆம் தேதி காலை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையணையால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில், கவுதமியின் கணவர் ராஜேஷிற்கும், கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவம் நகரைச் சேர்ந்த கலைவாணி(30) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்ததும் கவுதமி அவரது கணவரை கண்டித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் இந்த கொலையில் ராஜேஷிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், ராஜேஷ் ராணுவத்திலிருந்து சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறி விடுமுறையில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த ராஜேஷை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் தனது காதலியின் தூண்டுதலின் பேரில்தான் தனது மனைவி கவுதமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஷும், அவரது காதலி கலைவாணியும் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே கள்ளகாதலுக்கு இடையுறாக இருந்த மனைவியை கொலை செய்த ராணுவவீரர் மற்றும் கள்ளகாதலி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவரது மனைவி கவுதமி (29). இவர்களுக்கு கடந்த 2012 ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜேஷ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். 
இந்நிலையில் கவுதமி கடந்த 5 ம் தேதி காலை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலையணையால் அவரை முகத்தை அமுக்கி யாரோ கொலை செய்திருந்தனர். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
அதில் கவுதமியின் கணவர் ராஜேசிற்கும், கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவம் நகரைச் சேர்ந்த கலைவாணி(30) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்ததும் கவுதமி அவரது கணவரை கண்டித்து வந்ததும் தெரிய வந்தது. 
இதனால் இந்த கொலைக்கு ராஜேசிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் ராஜேஷ் விடுமுறையில் ராணுவத்தில் இருந்து புறப்பட்டு தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் தேடி வந்தனர். 
இந்நிலையில் போலீஸ் தேடிய ராஜேஷ் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் போலீசாரிடம் பிடிபட்டார். அப்போது அவர் தனது கள்ளக்காதலி தூண்டுதலின் பேரில், தான் தனது மனைவி கவுதமியை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ராஜேசையும், அவரது கள்ளக்காதலி கலைவாணியையும் போலீசார் கைது செய்தனர். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.