ETV Bharat / jagte-raho

என்னடா இப்படி பொசுக்குன்னு ஓடிட்ட - நகைக் கடையில் திருட்டு! - jewelry theft

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 9 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற திருடனை சிசிடிவி காட்சிகள் கொண்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நகை கடை திருட்டு
நகை கடை திருட்டு
author img

By

Published : Oct 15, 2020, 8:58 PM IST

சென்னை: வாடிக்கையாளர் போல் நகை கடைக்கு வந்து 9 சவரன் நகையை திருடன் திருடிச் சென்றான்.

பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தில் நகைக் கடை ஒன்றில் பட்டபகலில் இன்று(அக்.15) நகை வாங்குவது போல் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி ஒவ்வொரு நகையாக பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

திடீரென 9 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். கடைக்காரர் அவனை துரத்திக் கொண்டு ஓடியும் பிடிக்க முடியவில்லை.

நகை கடை திருட்டு

இதுகுறித்து கடையின் சார்பில் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி - மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.