ETV Bharat / jagte-raho

வெள்ளி வியாபாரியிடம் 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளி பறிமுதல்!

author img

By

Published : Oct 14, 2019, 9:40 AM IST

சேலம்: வெள்ளி வியாபாரிகளிடம் வருமான துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Salem

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி, சிவதாபுரம், திருமலைகிரி சித்தர் கோவில், வேடுகாத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளி தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள வெள்ளி கடைகளில் வெள்ளி கட்டிகளை வாங்கிவந்து அதை உருக்கி வெள்ளி கொலுசுகள், வெள்ளி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிக் கொலுசுகள் மும்பை, கொல்கொத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளின் உரிமையாளர்கள் இங்கு வந்து வெள்ளிக் கட்டிகளை கொடுத்து வெள்ளிக் கொலுசுகள் செய்து பெற்று செல்கின்றனர்.

ஆனால் வெள்ளிப்பட்டறை உரிமையாளர்கள் வருமான வரி கட்டுவது இல்லை என புகார்கள் எழுந்தன.இதையடுத்து, வருமான வரித்துறை அலுவலர்கள் வேடுகாத்தாம்பட்டி பகுதியிலுள்ள வெள்ளிப்பட்டறை உரிமையாளர்கள் சிலரிடம் திடீரென விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கருப்பனூர் பழனிவேல் என்ற வெள்ளிப்பட்டறை வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளிக் கட்டிகள், வெள்ளிப் பொருட்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அலுவலர்கள் கொண்டலாம்பட்டி, சித்தர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெள்ளி வியாபாரிகளிடம் சோதனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் வெள்ளிக் கொலுசுகள் அதிகம் உற்பத்தி செய்யப்படும். மேலும், வருமான வரித்துறை அலுவலர்கள் திடீரென சோதனை நடத்துவது சேலத்தில் உள்ள வெள்ளி வியாபரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிரபல தனியார் பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் வருமான வரி சோதனை!

Intro:சேலம் அருகே வெள்ளி வியாபாரியிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Body:
சேலம் அருகே உள்ளது கொண்டலாம்பட்டி. இங்குள்ள சிவதாபுரம் மற்றும் திருமலைகிரி சித்தர் கோவில் , வேடுகாத்தாம்பட்டி மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளி தொழில் அதிகம் நடக்கிறது .
வெள்ளி கட்டிகளை வாங்கிவந்து இதை உருக்கி வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால் கொலுசுகள் மும்பை, கொல்கொத்தா , பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

இது தவிர தமிழகம் முழுவதும் இருந்து நகைக்கடைகளின் உரிமையாளர்கள் இந்த பகுதிக்கு வந்து வெள்ளி கட்டிகளை கொடுத்து வெள்ளி கால் கொலுசுகள் செய்து திரும்ப பெற்று செல்கிறார்கள் . ஆனால் வெள்ளிப்பட்டறை உரிமையாளர்கள் வருமான வரி கட்டுவது இல்லை என புகார்கள் எழுந்தது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வேடுகாத்தாம்பட்டி பகுதியிலுள்ள வெள்ளிப்பட்டறை உரிமையாளர்கள் சிலரிடம் திடீரென நேற்று இரவு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வேடுகாத்தாம்பட்டி கருப்பனூர் பழனிவேல் என்ற வெள்ளிப்பட்டறை வியாபாரியிடம் விசாரணை நடந்தது. அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 30 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது .

இந்த பொருட்களுக்கு ரசீதுகள் இல்லாததால் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .இந்த வெள்ளி கட்டிகளின் மதிப்பு சுமார் ரூபாய் 15 லட்சம் இருக்குமென தெரிகிறது.

இந்த சோதனையை யடுத்து கொண்டலாம்பட்டி மற்றும் வேடுகாத்தாம்பட்டி, சித்தர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் பல வெள்ளி வியாபாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளதாக தெரிகிறது .
தற்போது தீபாவளி நேரம் என்பதால் வெள்ளி கால் கொலுசுகள் அதிகம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துவது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.