ஜல்னா (மகாராஷ்டிரா): திருமணத்தை மீறிய உறவுகொண்ட பெண்ணை டிராக்டர் வைத்து இடித்து கொலைசெய்த மாமனாரையும், அவரது மகனையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
கன்சவாங்கி தெஹ்ஸிலின் கீழ் உள்ள சாப்பல்கான் கிராமத்தில் வசிப்பவர்களான பாத்வெல் சம்பத் லால்சரே, அவரது மகன் விகாஸ் லால்சரே ஆகியோர்தான் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அம்பாத் காவல் ஆய்வாளர் அனிருத்த நந்தேத்கர் தெரிவித்தார். இவர்கள் இறந்த பெண்ணில் மாமனாரும், மைத்துனரும் ஆவர்.
மரியா லால்சரேவின் (32) கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். எனினும், தனது கணவன் வீட்டிலேயே மரியா வசித்துவந்துள்ளார். இச்சூழலில், அதே கிராமத்தில் வசிக்கும் ஹர்பக் பகவத் (27) என்ற திருமணமானவருடன் அவர் உறவுகொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இதை எதிர்த்த கணவனின் வீட்டார், இந்த உறவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு... கணவனின் மண்டையை பிளந்த மனைவி
இதையறிந்த பகவத், தந்தை-மகன் இருவருக்கும் எதிராக அம்பாத் காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்திலும் புகார் அளித்திருந்தார். மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மார்ச் 30ஆம் தேதி, பகவத், மரியா ஆகியோர் தப்பி ஓடி குஜராத்தை அடைந்தனர். தொடர்ந்து இவர்களைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகாரளித்தனர்.
ஏப்ரல் 22ஆம் தேதி, குஜராத்திலிருந்து அவர்களை ஜல்னாவுக்கு காவல் துறையினர் மீண்டும் அழைத்துவந்தனர். அதன் பின்னர் அவர்கள் கிராமத்தில் ஒன்றாக வசித்துவந்தனர்.
அக்டோபர் 28ஆம் தேதி, பகவத், மரியா இருவரும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய வேளையில், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை டிராக்டர் கொண்டு இடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார் பெண்ணின் மாமனாரும், மைத்துனரும். தொடர்ந்து சக்கரங்களுக்கு அடியில் இட்டு நசுக்கியுள்ளார்.
கழிவுநீரால் வந்த தகராறு: இளம்பெண்ணை குத்திக்கொன்ற அண்டை வீட்டுக்காரர்!
இதில் காயமடைந்த அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இருவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சூழலில், பகவத்தின் மனைவி விகாஸ் லால்சாரேவும், அவரது தந்தையும் தனது கணவரையும், மரியாவையும் கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து, மரியாவின் மாமனார், மைத்துனரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்கள் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை) இன் கீழ் நாங்கள் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.