ETV Bharat / jagte-raho

மகள் உறவு கொண்ட சிறுமியை திருமணம் செய்வதற்காக மனைவியை கொலை செய்த கணவன் கைது...! - குளச்சல் காவல்துறையினர் கைது

கன்னியாகுமரி: முட்டம் பகுதியில் மகள் உறவு கொண்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக, மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை குளச்சல் காவல்துறையினர் கைது செய்தனர்.

husband-arrest
husband-arrest
author img

By

Published : Dec 28, 2020, 4:15 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பனிப்பிச்சை(36) என்பவருக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதி இரவு மாரடைப்பால் மேகலா இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தாருக்கு பனிப்பிச்சை தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நவம்பர் 18ஆம் தேதி காலையிலேயே அவசரமாக நல்லடக்கம் செய்தார்.

ஆனால், மேகலாவின் சகோதரர் அந்தோணியடிமைக்கு பனிபிச்சை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, மேகலா இறந்த 30ஆவது நாளான டிசம்பர் 21ஆம் தேதி முட்டம் தேவாலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது. அங்கு வந்த பனிப்பிச்சை, தனது மகனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை மேகலாவின் சகோதரி மகளிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்த 16 வயதுடைய சிறுமி, அதை தாயாரிடம் கொடுத்தார். அவரும் அந்த கடிதத்தை படித்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த கடிதத்தில், "உன்னை (சிறுமியை) காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்வே உனது சித்தி மேகலாவை அடித்துக் கொலை செய்தேன். தற்போது துணை இல்லாமல் தவிக்கிறேன். எனது குழந்தைகளுடன் சேர்ந்து நாம் வாழலாம். என்னை நீ காதலிக்க வேண்டும்" என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அந்த கடிதம் சகோதரர் அந்தோணியடிமையிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடிதத்துடன் குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அந்தோணியடிமை புகார் அளித்ததோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகாரளித்தார். அதன் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேகலாவின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்து தாசில்தார் முன்னிலையில் மருத்துவம் மற்றும் தடயவியல் துறையினர் உடற்கூராய்வு நடத்தி பனிப்பிச்சையை கைது செய்தனர்.

அதன் பிறகு பனிப்பிச்சை அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "மனைவியின் உடன் பிறந்த சகோதரியின் 16 வயதுடைய மகள், ஆன்லைன் வகுப்புக்காக பனிப்பிச்சை வீட்டுக்கு வந்தார். அப்போது, சிறுமிக்கு அவ்வப்போது பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்தார். இதனால் மனைவி மேகலாவுக்கு சந்தேகம் வந்ததையடுத்து, அவரை அடித்து பனிப்பிச்சை கொலை செய்தார்" என்றனர்.

இதையடுத்து, சிறுமிக்கு பனிப்பிச்சை எழுதிய கடிதத்தையும் அவரது வாக்குமூலத்தையும் ஆதாரமாக வைத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.