திருச்சி: விமான நிலையத்தில் 22 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டபோது, சென்னையைச் சேர்ந்த பாண்டிகுமார் என்பவர் 200 கிராம் எடையுள்ள தங்கச் செயினை அணிந்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், அதே விமானத்தில் பயணித்த விழுப்புரத்தைச் சேர்ந்த பரீஸ் என்பவர் 235 கிராம் எடையுள்ள செயின், வளையல், தோடு ஆகியவற்றைக் கடத்தியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சென்னையைச் சேர்ந்த முபாரக் நிசா என்பவர் 172 கிராம் எடையுள்ள செயின், கொலுசு ஆகியவற்றை அணிந்துக் கடத்தியதும் கண்டறியப்பட்டது.
மூன்று பேரிடமிருந்தும் மொத்தம் 22 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 608 கிராம் தங்கத்தை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
கையூட்டு பெற்ற டிஎஸ்பி, எஸ்ஐ-க்கு சிறைத் தண்டனை விதித்த திருச்சி நீதிமன்றம்!