ETV Bharat / jagte-raho

செல்போன் திருடும் கும்பல் கைது! - செல்போன் திருட்டு

சென்னை: புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

accust
accust
author img

By

Published : Jan 7, 2020, 2:08 PM IST

தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், இரவு வாகனத் தணிக்கையில் சேலையூர் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் சென்றதால் அவர்களை பின்தொடர்ந்த காவலர்கள், பூண்டிபஜார் அருகே ஒரு வாகனத்தை மட்டும் பிடித்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

பிடிபட்ட சேலையூர் பகுதியைச் சேர்ந்த பரத் (20), வினோத்குமார் (20), நரேஷ் குமார் (19), பூந்தமல்லியைச் சேர்ந்த அசோக் (20) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், பல நாட்களாகவே புறநகர் பகுதியில் செல்போன்களை திருடி, குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து மூன்று விலை உயர்ந்த செல்போன்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பிச் சென்ற மற்ற இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சக மாநிலத்தவரைக் கொலை செய்த இளைஞர் கைது!

Intro:புறநகர் பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது, அதில் இரண்டு பேர் தப்பியோட்டம் போலீசார் தீவிர விசாரணைBody:புறநகர் பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது, அதில் இரண்டு பேர் தப்பியோட்டம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை வைத்து செல்போன் சர்விஸ் மற்றும் செல்போன் விற்பனை செய்து வருகின்றார்.

வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடை உள்ளே சென்று பார்த்தபோது விலை உயர்ந்த 3 செல்போன்கள்,மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது

இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

சேலையூர் போலீசார் இரவு நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனத்தை கண்ட போலீசார் நிருத்தினார். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் அதி வேகமாக சென்றதால் சந்தேகம் ஏற்பட்டு பின்தொடர்ந்த போலீசார் பூண்டிபஜார் அருகே ஒரு வாகனத்தை மட்டும் பிடித்தனர்
இதனை கண்ட மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

சேலையூர் பகுதியை சேர்ந்த பரத்(20) வினோத் குமார்(20) நரேஷ் குமார் (19) பூந்தமல்லியை சேர்ந்த அசோக் (20)
ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர், இரு சக்கர வாகன ரேஸ் ஓட்டுகின்றனரா என்று நினைத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்

பின்னர் நான்கு பேரிடம் போலீசார் பாணியில் விசாரணை மேற்கொண்டதில் பல நாட்களாகவே புறநகர் பகுதியில் செல்போன்களை திருடி குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது பின்னர் அவர்களிடமிருந்து மூன்று விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்

பின்னர் பிடிபட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி சென்ற மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.