மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (செப். 1) அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, மியான்மரிலிருந்து கடத்தப்பட்ட 75 வகையான சிகரெட்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியாகும். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைதுசெய்யப்படவில்லை. இருந்தபோதிலும் இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுபோன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி மியான்மரின் எல்லையில் உள்ள அதே சம்பாய் மாவட்டத்தில் ஒருவரிடமிருந்து ரூ. 3.50 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மிசோரத்தில் ஜூலை 1 முதல் இதுவரை சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...செப்., 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி!