சென்னை தியாகராயநகர் மூசா தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது உத்தம் மொத்த வியாபார நகைக்கடை. இக்கடையின் உரிமையாளர்களான ராஜேந்திர குமார், தருண், பரிஸ் ஆகியோர் நேற்றிரவு(அக்.20) வியாபாரம் முடிந்த பின்னர் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் வைக்கப்பட்டிருந்த அலமாரி உடைக்கப்பட்டு, உள்ளிருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5 கிலோ தங்க, வைர, வெள்ளி நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் உடனே மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொள்ளை நடந்த இடத்தை காவல் இணை ஆணையர் பாபு, தி. நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அயர்லாந்திலிருந்து பார்த்த மூன்றாம் கண்: மதுரவாயலில் மாட்டிக்கொண்ட 'சைக்கோ முரளி'