ETV Bharat / jagte-raho

மின்வாரிய ஊழியர் அடித்துக் கொலை! அண்ணன் மகன் கைது!

ராஜகண்ணு என்பவரின் மகள் குறித்து, அவரின் அண்ணன் மகன் சண்முகம் சந்தேக தொனியில் பேசியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக, சண்முகம் மூங்கில் தடியால் ராஜகண்ணுவை தாக்கியதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மின்வாரிய ஊழியர் அடித்து கொலை
மின்வாரிய ஊழியர் அடித்து கொலை
author img

By

Published : Sep 6, 2020, 3:01 PM IST

மயிலாடுதுறை: மின்வாரிய ஊழியர் அடித்துக் கொலை செய்த அவரது அண்ணன் மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாச்சிக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகண்ணு (57). இவர் ஆக்கூர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வேம்பு என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவ்வேளையில், இவரது அண்ணன் மகன் சண்முகம் (37) என்பவர் “உனது மகள் யாரிடமோ கைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறார்” என ராஜகண்ணுவிடம் கூற, இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் மதுபோதையில், ராஜகண்ணுவை மூங்கில் தடியால் தாக்கினார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த ராஜகண்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜகண்ணு உயிரிழந்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.