ETV Bharat / jagte-raho

தங்கக் கடத்தல் வழக்கு: முதலமைச்சர் பினராயி விஜயனின் உதவியாளரிடம் விசாரணை! - முதலமைச்சர் பினராயி விஜயனின் நெருங்கிய உதவியாளரிடம் விசாரணை

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் உதவியாளரை அமலாக்க இயக்குநரகம் விசாரணைக்காக வரவழைத்துள்ளது.

Kerala gold smuggling case
Kerala gold smuggling case
author img

By

Published : Dec 18, 2020, 7:18 PM IST

திருவனந்தபுரம்: தேசிய விசாரணை அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து புகாரளித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதிய மறுநாளே அவரது நெருங்கிய உதவியாளர் ரவீந்திரன் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்தார்.

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து அமலாக்கத் துறை, சுங்கத் துறை, என்.ஐ.ஏ. போன்ற அமைப்புகளின் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல், பிற வழக்குகளில் தேசிய விசாரணை அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து புகாரளித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

இவ்வழக்கில் பிரதியாக முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் ரவீந்திரன் சிகிச்சைப் பெற்று வந்ததால் விசாரணையில் ஆஜராகவில்லை.

மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் கரோனா தொற்று சிகிச்சைக் காரணமாக ரவீந்திரன் ஆஜராகவில்லை. மேலும், நான்காவது முறையாக நேற்று(டிச.17) ஆஜராக ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ரவீந்திரன் நேற்று ஆஜரானார். அமலாக்கத் துறையினர் தன்னை காவலில் எடுத்து விசாரிக்க தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, தனது உதவியாளரை பாதுகாக்க முதலமைச்சர் பினராயி விஜயன் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸும், பாஜகவும் விமர்சித்து வருகின்றன.

இதையும் படிங்க: கேரள முதலமைச்சரின் கூடுதல் தனிச்செயலருக்கு அழைப்பாணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.