டெல்லி: 2020ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் முக்கிய குற்றங்களாக இருந்துள்ளன.
கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள், குழந்தைகள் வீடுகளில் முடங்கினர். இதனால் மார்ச் மாதத்திலிருந்து பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் அதிகரித்து காணப்பட்டன.
இதுபோன்ற புகார்கள் மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டே சென்றன, இந்நிலையில், அதிகப்பட்சமாக ஜூலை மாதத்தில் 660 புகார்கள் பதியப்பட்டன.
2020ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 5,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதியப்பட்டுள்ளன. பெண்கள் பலரும், பொருளாதார பாதுகாப்பின்மை, நிதி உறுதியற்ற தன்மை மற்றும் மற்றவர்களிடையே தனிமைப்படுத்தல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டதாக தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது கடினம். இருப்பினும் புகார்கள் அதிகரித்துள்ளன. கடந்த காலங்களில் வன்முறை புகார்கள் அதிகரித்து காணப்பட்டன” என்றார்.
இதையும் படிங்க: 'டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர்'- ஹாசன் ரூஹானி