திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு மருத்துவமனை அருகில் தலித் விடுதலைக் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று(நவ.8) இரவு கட்சி அலுவலகத்தை நிர்வாகிகள் வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள், கட்சி அலுவலகத்திற்கும், கட்சி அலுவலகத்திற்குப் பயன்படுத்தும் ஆட்டோ உள்ளிட்டவைகளுக்கும் தீ வைத்துச் சென்றுள்ளனர். இதில் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமானது.
இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீ வைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்டையில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் - உயிர் இருப்பதாகக் கூறி தாய் அளித்த முதலுதவி