ETV Bharat / jagte-raho

அதிமுக எம்பி வீடு முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு! - அதிமுக எம்பி வீடு முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு

கன்னியாகுமரி: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

mp
mp
author img

By

Published : Nov 24, 2020, 1:45 PM IST

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவரான அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமாரின் வீடு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் உள்ளது. அவரது குடும்பத்தினர் அங்கு வசித்து வரும் நிலையில், விஜயகுமார் தற்போது டெல்லியில் உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை விஜயகுமாரின் வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமாக பிளாஸ்டிக்கால் ஆன ஐஸ்கிரீம் பந்து காணப்பட்டது. இதனால் குழப்பமான விஜயகுமாரின் குடும்பத்தினர் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து அவர்கள் சோதனையிட்டபோது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட நாட்டு வெடிகுண்டு பந்து வடிவில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதிமுக எம்பி வீடு முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு!

பின்னர், அந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். அப்பகுதி வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், அங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். எம்பி வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிகழ்வு நாகர்கோவில் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகனை கைது செய்ய வந்தபோது தாய்க்கு நேர்ந்த விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.