ETV Bharat / jagte-raho

கோவை கார் விபத்து: பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

கோவை: கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்து
கார் விபத்து
author img

By

Published : Jan 13, 2021, 1:12 PM IST

கோவை மாவட்டம் ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்துவந்தார். இவரது உறவினர் அனந்தராமன். இவர், ஆலாந்துறை அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.

இவர்கள் இருவரும் நேற்றிரவு (ஜன. 12) ஆலாந்துறையிலிருந்து அவர்களது அத்தையை அருகே உள்ள சென்னனூரில் அவரது வீட்டில் விட்டு இருவரும் காரில் திரும்பினர்.

சிறுவாணி சாலை, சிவசக்தி திருமண மண்டபம் அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த வாகை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சஞ்சீவ்குமார், முன் சீட்டில் அமர்ந்திருந்த அனந்தராமன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன. 13) காலை இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பேரூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...சிக்கன் ரைஸால் கைதான பாஜக நிர்வாகிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.