ETV Bharat / jagte-raho

அண்ணன் மனைவியுடன் தனியாகப் பொழுதைக் கழித்த தம்பி; தலையில் கல்லைப் போட்டுக் கொலை!

சென்னை: மயிலாப்பூரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சொந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார். தம்பியுடன் சேர்ந்து தனது மனைவி செருப்பால் அடித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலமும் அவர் அளித்துள்ளார்.

chennai crime
chennai crime
author img

By

Published : Sep 2, 2020, 8:30 PM IST

சென்னை: மயிலாப்பூரில் மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனி. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், மரியா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் பழனிக்கு தீ விபத்தில் காயம் ஏற்பட்டது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனியின் தம்பியும் ஆட்டோ ஓட்டுநருமான செந்தில் குமார், அண்ணன் மனைவி மரியாவுடன் திருமணத்தை மீறிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்த பழனி, தனது தம்பி செந்தில் குமாருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்தார். ஆனால், அந்தப் பெண் செந்தில் குமார், மரியா இடையேயான திருமணத்தைத் தாண்டிய உறவை அறிந்து, சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால் மீண்டும் செந்தில் குமார், மரியா இடையேயான பழக்கம் வலுப்பெற்றுள்ளது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே, மரியா குழந்தைகளுடன் பிரிந்து சென்று, தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் செந்திலோடு தான் எடுத்த புகைப்படங்களை பழனிக்கு அனுப்பி வைத்து, ஆத்திரத்தைத் தூண்டியுள்ளார். இச்சூழலில், சில தினங்களுக்கு முன், மயிலாப்பூர் பகுதிக்கு வந்த மரியா, செந்திலை சந்திக்க வீட்டிற்குச் சென்றார்.

அப்போது தகராறு ஏற்படவே செந்தில், பழனியைப் பிடித்துக்கொள்ள, மரியா தனது செருப்பால் பழனியை அடித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அவமானமடைந்த பழனி, நேற்றிரவு (செப்டம்பர் 1) தனது தம்பி செந்தில் குமார் போதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடினார்.

தகவலறிந்த மயிலாப்பூர் காவல் துறையினர் செந்தில்குமார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பட்டினப்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த பழனியைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.