நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருபவர் குகநாதன் (45). இவர் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தேனாம்பேட்டை பீர்க்காரன் தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அங்கு சாலையோரத்தில் பூக்கடை வைத்துள்ள பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சாதாரண உடையிலிருந்த தலைமைக் காவலர் குகநாதன் இதனைக் கண்டதும், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதனைத் தடுக்கச் சென்றார். பின்னர்தான் தெரிந்தது குடிபோதை நபர், தனது தாயையே தாக்கிக் கொண்டிருந்தார் என்று.
உடனே குகநாதன் அந்த இளைஞரை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, அந்த இளைஞர் தலைமைக் காவலரையும் தாக்கியுள்ளார். பின்னர், இது தொடர்பாக குகநாதன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் தாய், காவலரைத் தாக்கிய குமரேசன் (23) என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தகராறில் ஓட்டுநர் முகத்தில் ’ஸ்ப்ரே’ அடித்த வழக்கறிஞர்!