ETV Bharat / jagte-raho

3 இடங்களில் மூவரிடம் வழிப்பறி: இருவர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு! - chennai avadi robbery

ஒரேநாளில், மூன்று இடங்களில் வெவ்வேறு நபர்களிடத்தில் வழிப்பறியில் ஒரு கும்பல் ஈடுபட்டது. அதில் சம்பந்தப்பட்ட இருவரை ஆவடி காவல் துறையினர் கைதுசெய்துள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

avadi robbery
avadi robbery
author img

By

Published : Sep 3, 2020, 8:34 AM IST

சென்னை: ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஆவடியை அடுத்த அண்ணனூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரகுவரன் (30). இவர், கார் ஓட்டுநராக உள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு ரகுவரன் வேலை முடிந்து வீட்டுக்கு அண்ணனூர் ரயில்வே கேட் அருகில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்து உள்ளனர்.

பின்னர், அவர்கள் ரகுவரனை கல்லால் தாக்கி, அவரது சட்டைப் பையிலிருந்த விலையுயர்ந்த கைபேசி, 3,000 ரொக்கப்பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதேபோல, அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், குமாரசாமி 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (24). இவரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மூன்று பேர், கல்லால் தாக்கி சட்டைப் பையிலிருந்த கைபேசியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து, அத்திப்பட்டு, ஐ.சி.எஃப். காலனி, செல்லியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் முகமது அன்சாரி (27). இவரிடமும் ஆறு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது.

மேற்கண்ட வழிப்பறிச் சம்பவங்களில், படுகாயமடைந்த மூன்று நபர்களும் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இத்தொடர் வழிப்பறிச் சம்பவங்கள் குறித்த புகாரின் அடிப்படையில், ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய, ஆவடி, ஆனந்தம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த நூர் அமீன் (20), அவரது கூட்டாளியான 17 வயது சிறுவன் ஆகிய இருவரைக் காவல் துறையினர் நேற்று (செப்டம்பர் 2) கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், 2 கைப்பேசி, பணம் ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சரவணன் என்பவரை ஆவடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.