ETV Bharat / jagte-raho

செல்போன் கடையில் திருட்டு; புகாரை கண்டுகொள்ளாத காவல்துறை!

author img

By

Published : Oct 1, 2020, 6:50 PM IST

பல்லாவரம் பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடைகளை குறிவைத்து அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

cellphone repair shop robbery
cellphone repair shop robbery

சென்னை: செல்போன் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து 10-க்கும் மேற்பட்ட மொபைல்களும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் திருமால் நகர் பஜார் தெருவில் பாபு என்பவர் ஏழு வருடங்களாக செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம் போல் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் காலை கடையை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது சர்வீஸ்காக வாங்கிய பத்திற்கும் மேற்பட்ட மொபைல்களும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் காணாமல் போனது தெரியவந்தது. அதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து புகாரை ஏற்றுக் கொண்டு விசாரிப்பதாகக் கூறி காவல்துறையினர் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாபு குற்றஞ்சாட்டுகின்றார்.

இந்தச் சம்பவம் மட்டும் அல்லாமல் அதே நாளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற முயற்சித்துள்ளனர். பலமணிநேரம் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்தும் உடைக்க முடியாமல் போனதால் ஒரு கடையில் கிடைத்தை மட்டும் சுருட்டிக் கொண்டு ஓடி உள்ளனர்.

பழைய மொபைல் சர்வீஸ் கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய நபர்கள் புறநகர் பகுதியில் முதல்முறையாக நடத்தியுள்ளனர். திண்டுக்கல் பூட்டு போட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக இரண்டு கடைகள் இருந்து செல்போன்கள் தப்பியது.

இனிவரும் காலங்களில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என கடைக்காரரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு! கடத்தல்காரர்களிடம் தொடரும் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.