சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே கடற்கரைச் சாலையில் ஜெய்கணேஷ் என்பவர் இன்று காலை நடந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஜெய் கணேஷை பின்தொடர்ந்து வந்த கார்த்திக் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் அவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதற்கிடையே, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கோட்டை காவல் துறையினர், தப்பி ஓட முயன்ற இருவரையும் விரட்டிப்பிடித்தனர்.
பின்னர், இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது ஏற்கனவே பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கார்த்திக் மற்றும் நிஷாந்தை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த செல்போன்களை கைப்பற்றினர்.