ETV Bharat / jagte-raho

'சாத்தான்குளம் விவகாரத்தில் தரமான விசாரணை நடைபெற்று வருகிறது' - ஐஜி சங்கர்!

author img

By

Published : Jul 1, 2020, 8:10 PM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் விவகாரத்தில் தரமான விசாரணை நடைபெற்று வருவதாக ஐஜி சங்கர் தெரிவித்தார்.

 'சாத்தான்குளம் விவகாரத்தில் தரமான விசாரணை நடைபெற்று வருகிறது' - ஐஜி சங்கர்!
Investigation about father son dead issue

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்த வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் காவல் நிலையம் அரசு மருத்துவமனை, ஜெயராஜின் வீடு, அவர்கள் பகுதியிலுள்ள வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று (ஜூலை 1) காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோவில்பட்டி கிளைச் சிறையிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விசாரணையை ஆய்வு செய்வதற்காக சிபிசிஐடி ஐஜி சங்கர் சாத்தான்குளம் வந்தார். அவருடன் எஸ்பி விஜயகுமாரும் வருகை தந்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள ஆவணங்கள், சிசிடிவி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஜெயராஜ் வீட்டிற்குச் சென்ற ஐஜி சங்கர், குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் சாத்தன்குளம் பஜாரில் உள்ள செல்போன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர் தரமான விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றப்பத்திரிகையில் மாற்றம் ஏற்படலாம், 12 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.