ETV Bharat / jagte-raho

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு: சிபிசிஐடி உதவி ஆணையர் விசாரணைக்கு ஆஜர்! - undefined

சென்னை: அயனாவரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் உதவி ஆணையர் உட்பட காவலர்கள் 7 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு
ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு
author img

By

Published : Sep 9, 2020, 6:43 AM IST

அயனாவரம் நியூ ஆவடி சாலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். செப்டம்பர் 3ஆம் தேதி உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக், வடிவேல், ஜெயப்பிரகாஷ், முருகன் ஆகிய 7 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பினர்.

இச்சூழலில், இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் அனைத்தும் காணொலியாகப் பதிவும் செய்யப்பட்டது. முன்னதாக அனைவரிடமும் சுமார் 25 கேள்விகள் அடங்கிய படிவம் வழங்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில்களை பதிவு செய்கின்றனர். இதனை தொடர்ந்து சங்கரின் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.