ETV Bharat / jagte-raho

நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் - மீட்டுத் தர கோரி போராடும் மூதாட்டி! - old lady fighting for redemption

கோவை : பாஜக பிரமுகரால் அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தர கோரி மூதாட்டி ஒருவர் கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் -  மீட்டுத் தர கோரி போராடும் மூதாட்டி!

author img

By

Published : Sep 3, 2020, 9:05 PM IST

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதி முஸ்லீம் காலனியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(75). அவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் மூன்று செண்ட் இடம் உள்ளது.

அதில் ஓட்டு வீடு ஒன்றைக் கட்டி வசித்து வந்துள்ளார். அவருக்கு மகன், மகள் என இரண்டு வாரிசுகள் இருக்கின்றனர். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். மகள் திருமணமாகி கணவரைப் பிரிந்து அவரது குழந்தையுடன் கண்ணாம்மாள் வீட்டிலேயே வாழ்ந்துவருகிறார்.

இவர்கள் பல நாள்களாக அதே பகுதியில் வசித்துவரும் பாஜகவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மளிகைக் கடையில் கடனுக்கு மளிகை சாமான்கள் வாங்கி வந்துள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மளிகை சாமான்களின் கடன் மதிப்பு அதிகமானதாக கூறி அந்த கணக்கிற்கு உங்கள் மூன்று செண்ட் இடத்தில் ஒரு செண்ட் இடத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு போக்கியத்திற்கு கேட்டுள்ளார்.

இதற்கு குடும்பத்தாரிடம் கேட்டு கூறுவதாக கண்ணம்மாள் கூறியுள்ளார். ஆனால் போக்கியத்திற்காக தான் என்றும் இதில் பிரச்னை ஏற்படாது என்றும் கூறி கண்ணம்மாளை அழைத்து சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் கை நாட்டி வாங்கி விட்டு 50,000 ரூபாய் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆறுமுகம், கண்ணாம்மாளிடம் உங்கள் ஒரு செண்ட் இடத்தை நாங்கள் வாங்கி விட்டோம் ஒரு வாரத்திற்குள் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

போக்கியத்திற்கு ஒரு லட்சம் என்று கூறி, வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே அளித்திருந்த நிலையில், மேலும் இரு செண்ட்டையும் வாங்கிக் கொண்டதாகக் கூறி ஐம்பதாயிரத்தை அளித்து அவர்களது குடும்பத்தை வெளியேறுமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மற்றும் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

ஆனால், பாஜகவைச் சேர்ந்த ஆறுமுகத்திற்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று காவலர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அடாவடியாக ஆறுமுகம் கடந்த டிசம்பர் மாதம் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கண்ணம்மாள் வீட்டை இடித்துள்ளார்.

இடிக்கப்பட்ட வீட்டிலிருந்து வெளியேறிய கண்ணம்மாள், அவரது மகள் மற்றும் பேத்தி ஆகிய மூவரும் அருகில் இருக்கும் உறவினர்களுடன் வசித்து வருகின்றனர்.

இது குறித்து கண்ணம்மாள் ஆறுமுகத்திடம் கேட்டால் சாதியின் பெயரை கூறி இழிவாக பேசியுள்ளார்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று இது தொடர்பாக சட்டப்போராட்டம் நடத்தி பார்த்து கொள்ளலாம் என்று கண்ணம்மாள் முடிவெடுத்த நிலையில் கரோனா ஆரம்பத்ததால் நீதிமன்றங்களும் மூடபட்டன.

தொடர்ந்து, அபகரிக்கப்பட்ட மூதாட்டியின் நிலத்தில் ஆறுமுகம் வீடுக் கட்டும் பணிகளைத் தொடங்கியிருப்பதால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள் இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க முடிவெடுத்தார்.

அதன்படி, இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்தும், தன்னிடம் ஏமாற்றி வாங்கிய இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனுவொன்றை அளித்தார்.

இது குறுத்து ஆறுமுகத்திடம் கேட்கையில், " அந்த இடத்தை சட்ட ரீதியாக தான் வாங்கியுள்ளோம். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் தான் அங்கு வீடு கட்டவும் ஆரம்பித்துள்ளோம்" என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.