அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூர் வஉசி நகரைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (48). விதவையான இப்பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து, குடல் உருவப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அதே தெருவைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரின் வீட்டுக்கு வரும் விஜய் பாஸ்கருக்கு இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ளதை கண்டறிந்தனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவில்சீமை கிராமத்தைச் சேர்ந்தவர், விஜய் பாஸ்கர். இவர் மீது அரியலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேலான கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் திருடும் நகைகளை அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூர் வஉசி நகரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர்தான் விற்றுப் பணம் கொடுப்பார். இதனால் பேச்சியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி விஜய் பாஸ்கர் வருவதுண்டு.
அப்படி சம்பவம் நடந்த அன்று வந்த விஜய் பாஸ்கர், பேச்சியம்மாள் வீட்டில் அவரது மகளிடம் செல்போனைப் பறித்துச் சென்றுள்ளார். பின்னர் மதுபோதையில் வந்த விஜய்பாஸ்கர், பேச்சியம்மாள் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், அவர் திறக்காததால் மலர்க்கொடி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது கதவைத் திறந்த மலர்க்கொடியிடம் விஜய்பாஸ்கர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட முயற்சித்துள்ளார். அந்த இடத்திலிருந்து மலர்க்கொடி தப்பிக்க முயன்றபோது, விஜய்பாஸ்கர் தான் வைத்திருந்த கத்தியை வைத்து மண்டையில் தாக்கியுள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த மலர்க்கொடியின் உடற்பாகங்களை விஜய்பாஸ்கர் கிழித்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து விஜய் பாஸ்கரைக் கைது செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...ஏமாற்றிய உதவி ஆய்வாளர்: சட்டப்போராட்டம் நடத்தி வழக்கு பதியவைத்த பெண்!