கர்நாடக மாநிலம் மங்களூரு நீதிமன்றம் அருகே மற்றொரு எச்சரிக்கை வாசகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு கத்ரி பட்டகுடேயில் ஒரு எச்சரிக்கை வாசகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மங்களூருவில் உள்ள கோடியல்பெயில் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஒரு பழைய புறக்காவல் நிலையத்தின் சுவரில் எழுதப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள், பயங்கரவாதம் பற்றி அதில் எதுவும் இல்லை. கத்ரியில் சுவரில் குழு இதை எழுதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சுவரில், GUSTAK E RASOOL EK HI SAZA SAR TAN SAY JUDA - என்று உருது அர்த்தம் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகத்தின் பொருள் ‘நபி கோபமடைந்தால், ஒரே தண்டனை உடலில் இருந்து தலை பிரிக்கப்படும்’ என்பதாகும். இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கிரிக்கெட் சூதாட்டத்திற்கு நகை தராததால் தாய், தங்கையை கொன்ற இளைஞர்!