ETV Bharat / jagte-raho

தலைக்கேறிய போதை : பேரிகேட் மீது ஏறி ரகளை செய்த கும்பகோணம் இளைஞர் - திருப்பதி

திருப்பதி : கும்பகோணத்தைச் சேர்ந்த பாபு எனும் இளைஞர், குடிபோதையில் ஆந்திர ரயில் நிலையத்திற்கு முன் இருந்த பேரிகேட் மேல் ஏறி குதிக்க முயன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

a-viral-video-of-drunken-tamilnadu-youngster-climbed-a-flexi-barricade-in-tirupathi

author img

By

Published : Jun 29, 2020, 1:33 PM IST

ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்திற்கு முன் அமைந்துள்ள பேரிகேட்டின் மேல் ஒருவர் ஏறி குதிக்க இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

பேரிகேட் மீது ஏறி ரகளை செய்த கும்பகோணம் இளைஞர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், பேரிகேட் மீது ஏறியவரை கீழே இறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் இறங்க மறுத்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர், பின்னர் தொங்கியவாறு கீழே குதித்துள்ளார்.

இதில் நல்வாய்ப்பாக அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. பின்னர் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் பாபு என்பதும் தெரிய வந்தது. இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: நிலத் தகராறு: தந்தையின் 2ஆவது மனைவியைக் கொலைசெய்ய முயற்சித்த நபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.