சென்னை வேப்பேரியில் உள்ள பிரின்ஸ் பாரடைஸ் அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் ரோகித் கத்தோலியா. சவுகார்பேட்டையில் சொந்தமாக எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடை மகன் ரிஷி (7). ரிஷி எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், வீட்டில் இருக்கும் ரிஷி தனது நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம். நேற்று மாலை பத்தாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியின் கண்ணாடி மேல் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணாடி உடைந்து சிறுவன் கீழே விழுந்ததில், தலை சிதறி சம்பவ இடத்திலேயே ரிஷி உயிரிழந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மநீம-வைக் கண்டு பயப்படும் அதிமுக- டாக்டர் மகேந்திரன்