ETV Bharat / jagte-raho

ரயிலில் கடத்திவரப்பட்ட 38 கிலோ கஞ்சா! - ganja seized

சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை ரயில்வே காவலர்கள் கைது செய்து 38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

arrest
arrest
author img

By

Published : Nov 6, 2020, 3:06 PM IST

அசாம் மாநிலம் நியூ பங்க் ஐகான் பகுதியிலிருந்து வந்த ரயில், இன்று காலை 11 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலில் இருந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேர், நடைமேடையில் சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர், அவர்கள் மூவரிடம் இருந்த பைகளை சோதனை செய்ததில், சுமார் 38 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் மூவரையும் கைது செய்து விசாரித்த போது, அவர்கள் பகதூர் (29), நூர் இஸ்லாம் (26), மோபிபூய் இஸ்லாம் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் அசாம் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி, சென்னையில் சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூவரிடமும் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பூவிருந்தவல்லியில் மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.